Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிம்புவுக்கு நம்பிக்கை தந்த யூடியூப் ஹிட்ஸ்

06 மார், 2015 - 14:44 IST
எழுத்தின் அளவு:
You-Tube-hits-give-confident-to-Simbu

இளம் ஹீரோக்களின் ரேஸில் மிகவும் பின் தங்கி இருப்பவர் சிம்புதான். மற்ற ஹீரோக்களின் படங்களுக்கு உள்ள பிசினஸ் சிம்பு படத்துக்கு கிடையாது. நேற்று வந்த சிவகார்த்திகேயன் படத்துக்கு உள்ள பிசினஸில் 25 சதவிகிதம் கூட சிம்பு படத்துக்கு இல்லை. சிம்பு நடித்த படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகாது என்பதால் தியேட்டர்காரர்கள் மத்தியிலும் சிம்பு நடித்த படங்களுக்கு ஆதரவு கிடையாது.


இந்நிலையில் பாண்டிராஜ் இயக்கத்தில் நயன்தாராவுடன் இணைந்து சிம்பு நடித்திருக்கும் இது நம்ம ஆளு படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் ஓரளவு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதுதான் ஆச்சர்யம். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் கடந்த ஜனவரி 15ஆம் தேதி யூ டியூப்பில் வெளியிடப்பட்டது. சிம்புவும் நயன்தாராவும் மீண்டும் இணைந்து நடித்திருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்தினால். இது நம்ம ஆளு ஃபர்ஸ்ட்லுக் டீஸருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த டீஸர் வெளியான இரண்டு மூன்று நாட்களுக்குள்ளாகவே 10 லட்சம் பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர். தற்போது வரை அந்த டீஸர் 35 லட்சம் முறை ரசிகர்கள் பார்க்கப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இதை வைத்து இது நம்ம ஆளு படம் வெற்றியடையும் என நம்பிக்கொண்டிருக்கிறார் சிம்பு.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in