Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

துல்கர் சல்மான் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு விசிட் அடித்த கமல்..!

06 மார், 2015 - 14:26 IST
எழுத்தின் அளவு:
Kamal-visited-Dulqar-Salman-new-movie-shooting-spot

ஒரு படம் முழுவதும் பெயரில்லாமலேயே கதாநாயகன் நடித்திருக்கிறாரா என்றால் அது அபூர்வம் தான்.. இப்போது அடிக்கடி பரிசோதனை முயற்சிகளில் இறங்கும் மலையாள சினிமாவும் '100 டேய்ஸ் ஆப் லவ்' என்கிற படத்தில் அப்படி ஒரு முயற்சியை செய்யவிருக்கிறது. இந்தப்படத்தில் நாயகனாக நடிக்கும் துல்கர் சல்மானுக்கு படத்தில் பெயரே கிடையாதாம். 'உஸ்தாத் ஹோட்டல்' படத்தை தொடர்ந்து, துல்கருக்கு ஜோடியாக இதில் இரண்டாவது முறையாக நடித்திருக்கிறார் நித்யா மேனன். (மூன்றாவதாக ஜோடிசேர்ந்த படம் தான் 'ஓ காதல் கண்மணி')


'100 டேய்ஸ் ஆப் லவ்' படத்தை இயக்குபவர் அறிமுக இயக்குனராக களம் இறங்கியுள்ள ஜென்யூஸ் முகம்மது. இவர் வேறுயாருமல்ல பிரபல மலையாள இயக்குனர் கமலின் மகன் தான். தமிழில் கூட பிரசாந்த், ஷாலினி நடித்த 'பிரியாத வரம் வேண்டும்' படத்தை இயக்கினாரே அவர் தான் இயக்குனர் கமல். தன் மகன் இயக்கும் படம் தான் என்றாலும் ஐந்தே ஐந்து முறை தான் அந்தப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கே வந்தாராம். வந்தாலும் தனது மகன் செயல் எதிலும் குறுக்கிடாமல் அமைதியாக வேடிக்கை பார்த்தபடி சென்று விடுவாராம் கமல். இந்தப்படத்தின் டீசர் நேற்று வெளியாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in