Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அரை சதமடித்த டார்லிங் : மகிழ்ச்சியில் ஜி.வி.பிரகாஷ்!

06 மார், 2015 - 10:45 IST
எழுத்தின் அளவு:
Darling-movie-crosses-50th-day

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், நடித்த முதல்படமான பென்சில் திரைக்கு வருவதற்கு முன்பு டார்லிங், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படங்களிலும் கமிட்டானார். ஆனால், பென்சில் கொஞ்சம் டல்லடிக்கவே அதன்பிறகு அவர் நடித்த டார்லிங் முதலில் திரைக்கு வந்தது. அதோடு, வெற்றியும் பெற்றது. அதனால் ஜி.வி.பிரகாஷின் மற்ற படங்களில் படப்பிடிப்பு வேகமாக தொடங்கியிருக்கிறது. இந்த நிலையிலும், அவர் படங்களுக்கு இசையமைப்பதையும் விடவில்லை. இசையமைத்துக்கொண்டே நடித்து வருகிறார். அவர் இசையமைத்துள்ள கொம்பன் படத்தின் ஆடியோ விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது இந்த படத்துக்கு இசையமைக்க எனக்கு குறைந்த நாட்களே கொடுத்தார்கள். ஆனபோதும், இழுத்தடிக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் இசையமைத்துக்கொடுத்தேன்.


மேலும். எனது முதல் படமான வெயில் மற்றும் ஆடுகளம் படங்களுக்கு நேட்டிவிட்டி இசையை கொடுத்த நான் இந்த கொம்பன் படத்திற்கு இன்னும் அதிகப்படியான கிராமத்து இசையை கொடுத்திருக்கிறேன். அதோடு, இன்று கொம்பன் ஆடியோ வெளியீடு என்கிற சந்தோசத்தில் இருக்கும் எனக்கு டார்லிங் வெளியாகி இன்றோடு 50 நாள் ஆகிறது என்பது இன்னொரு மகிழ்ச்சியாக உள்ளது. ஆக, இன்றைய தினம் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி என்றார் ஜி.வி.பிரகாஷ்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in