வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
கே.பாக்யராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு படத்தில் அறிமுகமானவர் கோவையைச்சேர்ந்த சரளா. அந்த படத்தில் சிரிப்பு நடிகையாக நடித்தவர் இப்போதுவரை சிரிப்பு நடிகையாகவே நடித்துக்கொண்டிருக்கிறார். சில படங்களில் அம்மா வேடங்களில் நடித்தாலும் அவரை செண்டிமென்ட் ஏரியா பக்கம் அதிகமாக செல்ல விடாமல் காமெடிக்கே பயன்படுத்தி வருகிறார்கள். அதனால், மனோரமாவிற்கு பிறகு அவர் இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கோவை சரளா இதுவரை காமெடி சரளாவாகவே நடித்து வந்த நிலையில், தற்போது கார்த்தி நடித்துள்ள கொம்பன் படத்தில் முதன்முதலாக சீரியசான அம்மா வேடத்தில் நடித்திருக்கிறார்.