'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு |
சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு படத்தில் அறிமுகமானவர் விஷ்ணு. சினிமாவில் நடிப்பதற்கு முன்பு இவர் கிரிக்கெட் வீரராக இருந்தவர். மாநில அளவில் பல போட்டிகளில் கலந்து கொண்டு ஆடியவர். அப்போது அவரது காலில் ஏற்பட்ட பலத்த காயத்துக்கு பிறகு கிரிக்கெட் விளையாட்டில் இருந்து வெளியேறி சினிமா நடிகரானார் விஷ்ணு. ஆனால், சினிமாவில் நடிக்கத் தொடங்கிய பிறகும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டு அதிரடி ஆட்டக்காரராக திகழ்ந்தார். அவரது ஆட்டம் காரணமாக சென்னை அணி வெற்றி பெற்று வந்தது.