டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
காக்கி சட்டை படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளி வர உள்ள படம் ரஜினிமுருகன். திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் பொன்ராம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் இது. ரஜினிமுருகன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக முன்னாள் நடிகை மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். காமெடிக்கு சூரி! திருப்பதி பிரதரஸ் தயாரிக்கும் ரஜினி முருகன் படத்தை உலகம் முழுக்க வெளியிடும் உரிமயை 40 கோடிக்கு வாங்கி உள்ளது ஈராஸ் இண்டர்நேஷ்னல். ஈராஸிடமிருந்து தமிழக தியேட்டர்களில் வெளியிடும் உரிமையை ஸ்டுடியோ கிரீன் வாங்கி உள்ளது.
ரஜினி முருகன் படத்தின் வியாபாரம் வெற்றிகரமாக முடிந்துவிட்டாலும் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. சுமார் 30 சதவிகித காட்சிகளும் பாடல்காட்சிகளும் படமாக்கப்பட வேண்டி உள்ளது. திட்டமிட்டபடி படப்பிடிப்பு முடிந்துவிடும் என்ற நம்பிக்கையில், ரஜினி முருகன் படத்தை ஜூன் மாதம் வெளியிட திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில் எதிர்பாராதவிதமாக கதாநாயகி கீர்த்தி சுரேஷுக்கு கடும் காய்ச்சல். கேரளாவில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். உடம்பு மிகவும் பலவீனமாகிவிட்டதால் கண்டிப்பாக ஒரு மாதம் ஓய்வு எடுத்தாக வேண்டும் என்று சொல்லிவிட்டனர் டாக்டர்கள். எனவே ரஜினி முருகன் படப்பிடிப்பில் அவரால் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.