ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
டோலிவுட்டில் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நித்யா மேனன், தமிழ் தான் இவரை கொஞ்சம் ஓரம்கட்டினாலும் தெலுங்கு சினிமா இவரை அரவணைத்து முன்னணி நாயகியாகும் அளவுக்கு உயர்த்திவிட்டிருக்கிறது. ஆனால் எந்த உயரத்திற்கு சென்றாலும் அது ஒரு நாள் கீழே கொண்டு வரும் என்று தெரியாமல் தற்போது இவரது சம்பளத்தை 2 கோடி வரை உயர்த்திவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலிவுட்டில் வெளியான குயின் படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரைட்ஸ் அனைத்தையும் தயாரிப்பாளர் தியாகராஜன் வாங்கிவிட்டார், தற்போது அப்படத்தின் ரீமேக் வேலைகளில் பிசியாக இருக்கும் இவர், தெலுங்கில் முன்னணி நாயகியான நித்யா மேனனை நடிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார், இதுகுறித்து அவரை அணுகும்போது “எனக்கு 2 கோடி சம்பளம் கொடுங்க” என்று கேட்டாராம், இதனால் இன்னும் குயின் படத்தின் தெலுங்கு பதிப்பில் எந்த நடிகை நடிப்பார் என்பது முடிவாகவில்லை, அதுமட்டுமில்லாமல் மலையாள படமான பெங்களூர் டேஸ் ரீமேக்கிலும் நித்யா மேனன் தான் நடிக்கப்போகிறாராம்.