வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் |
காக்கி சட்டை படத்தையடுத்து ஸ்ரீதிவ்யா நடிப்பில் பென்சில், ஈட்டி ஆகிய படங்கள் திரைக்கு வரத் தயார்நிலையில் உள்ளன. இந்த படங்களில் பென்சில் படத்தில்தான் நடிப்பதற்கு காட்சிகள் அதிகம் உள்ளதாம். மற்றபடி ஈட்டியில் முழுக்க முழுக்க அதர்வாவை மையப்படுத்திய கதை என்பதால் பெயரளவுக்குத்தான் ஸ்ரீதிவ்யா பயன்படுத்தப்பட்டிருக்கிறாராம்.
ஆனால் வளர்ந்து கொண்டிருக்கும் தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் போன்று டம்மியான ஹீரோயினாக நடிப்பது வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சிலர் ஸ்ரீதிவ்யாவுக்கு அட்வைஸ் செய்ததை அடுத்து, புதிதாக கதை கேட்கும் டைரக்டர்களிடம் இரண்டு பாட்டுக்கு மட்டுமே வந்து ஆடிவிட்டு செல்லும் கதாநாயகியாக நடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. அதனால் வெயிட்டான கதாநாயகி வேடம் இருந்தால் மட்டும் சொல்லுங்கள். இல்லையேல் வேறு நடிகையை பார்த்துக்கொள்ளுங்கள் என்று திட்டவட்டமாக பேசி வருகிறார் ஸ்ரீதிவ்யா.
ஆனால் அவர் எதிர்பார்க்கிற மாதிரியான கதைகளுடன் யாருமே அவரை தேடிச்செல்லவில்லையாம். அதனால்தான் தற்போது தெலுங்கில் ஒரு வாரதி என்ற படத்தில் நடித்துள்ள ஸ்ரீதிவ்யாவுக்கு தமிழை விட தெலுங்கில் அதிகப்படங்களில் நடிக்கும் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. அதனால், தற்போது ஐதராபாத்தில் முகாமிட்டிருக்கும் அவர், அங்குள்ள மெகா ஹீரோக்களின் படங்களில் நடிக்க கடும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர், கவர்ச்சி கொடியை பறக்க விடவும் க்ரீன் சிக்னல் கொடுத்து விட்டாராம்.