தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஒருகாலத்தில் சிவா', 'சத்யா', 'பூத் ரிட்டர்ன்ஸ்' என ராம்கோபால் வர்மா இயக்கிய சில படங்களில் அவரது ஆஸ்தான வில்லனாக, கதாநாயகனாக நடித்துவந்தவர் தான் ஜே.டி.சக்கரவர்த்தி. கடந்த வருடங்களில் வெளியான விஷாலின் 'சமர்' மற்றும் விக்ரம்பிரபுவின் 'அரிமா நம்பி'யில் வில்லனாக கூட நடித்திருந்தாரே அவரேதான். இவர் நயன்தாராவின் முன்னாள் காதலர் என .அப்பட்டமாக பழி சுமத்துவோம் என்றுதானே நினைத்து ஏமாந்தீர்கள்..?
தற்போது நயன்தாரா, மலையாளத்தில் சித்திக் இயக்கத்தில் 'பாஸ்கர் தி ராஸ்கல்' என்கிற படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் அல்லவா..? அந்தப்படத்தில் தான் நயன்தாராவின் முன்னாள் காதலனாக நடிக்கிறார் ஜே.டி.சக்கரவர்த்தி. இன்னும் சொல்லப்போனால் மம்முட்டிக்கு வில்லன். மெகாஸ்டார் மம்முட்டி, நயன்தாராவுடன் நடிப்பது சக்கரவர்த்திக்கு ஒரு பக்கம் சந்தோசம் என்றால், இந்தப்படத்தில் அவரது கதாபாத்திரத்தை சித்திக் வடிவமைத்திருக்கும் விதம், அவருக்கு இன்னும் உற்சாகத்தை கொடுத்திருக்கிறதாம்.