'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ராகவா லாரன்ஸ் இயக்கி நாயகனாக நடித்து வரும் படம் 'காஞ்சனா 2'. இந்தப் படத்தில் நாயகியாக டாப்ஸீ நடிக்கிறார். தனது முந்தைய படங்களைப் போலவே இந்தப் படத்தையும் ஒரு பேய்ப் படமாக உருவாக்கி வருகிறார் ராகவா லாரன்ஸ். இதற்கு முன் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான 'காஞ்சனா' படத்தில் அப்பாவி இளைஞனாக ஒரு கதாபாத்திரத்திலும் 'காஞ்சனா' என்ற பேயாக பெண் தோற்றம் கொண்ட கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இந்தப் படத்தில் நான்கு விதமான பெண் பேய் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
15, 25, 40, 60 ஆகிய வயதில் பெண் தோற்றம் கொண்ட பேயாக ராகவா லாரன்ஸ் இந்தப் படத்தில் நடிக்கிறாராம். 'காஞ்சனா' படத்தில் ஒரே ஒரு பெண் பேய் தோற்றத்தில்தான் நடித்திருந்தார். 'காஞ்சனா 2' படத்திற்காக சிறப்பு மேக்கப்புகளுடன் நான்கு விதமான பெண் போய் தோற்றத்தில் மிரட்டலாக நடித்திருக்கிறார் என பட வட்டாரங்களிலிருந்து தகவல் கசிந்துள்ளது. படத்தின் பெயரையும் 'முனி 3 - கங்கா' என்பதிலிருந்து 'காஞ்சனா 2' என்று மாற்றியுள்ளதாலும் அது உண்மை என்றுதான் நம்பத் தோன்றுகிறது.
2013ம் ஆண்டே இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது. பல்வேறு காரணங்களால் இடையில் நிறுத்தப்பட்டு மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமாகி தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இடையில் ராகவா லாரன்ஸுக்கும் உடல்நிலை சரியில்லாமல் போனதும் படத்தின் தாமதத்திற்குக் காரணமாக அமைந்தது. படத்தை கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டு வருகிறார்களாம்.