சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது |
நான்கு தேசிய விருதுகள், 5 மாநில விருதுகள், 10 பிலிம் ஃபேர் விருதுகள் லட்சுமியின் அடையாளம், கணீர் குரல், பண்பட்ட நடிப்பு, முற்போக்கு சிந்தனை லட்சுமியின் இன்னொரு முகம். 40 ஆண்டுகளுக்குமேல் சினிமாவில் வலம் வந்தாலும் இன்றும் தன்னை புதுமுகமாக கருதும் குணம். இதுதான் லட்சுமி. கடைசியாக உன்னைப்போல் ஒருவன் படத்தில் தமிழக அரசின் தலைமை செயலாளராக நடித்தவர் 6 வருடங்களுக்கு பிறகு மூணே மூணு வார்த்தை படத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் நடித்திருக்கிறார். அவர் அளித்த சிறப்பு பேட்டி:
* உங்களை மாதிரி திறமையாளர்கள் சினிமாவை விட்டு விலகி இருக்கலாமா? ஏன் இவ்வளவு இடைவெளி விட்டுவிட்டீர்கள்?
நல்லா கேட்டீங்க போங்க. நான் என்னங்க நடிக்கவே மாட்டேன்னு சத்தியமா பண்ணியிருக்கேன். இல்ல எங்கையாவது சினிமாவை விட்டு விலகிட்டேன்னு பேட்டி கொடுத்திருக்கேனா. வாய்ப்பு வரலை... நடிக்கல. நடிக்க வந்த வாய்ப்புங்க எனக்கு பிடிக்கல... நடிக்கல அவ்ளோதான். அதுக்கா நான் நடிக்கமால் இல்லை. மலையாளம், தெலுங்கு படங்களில் இப்பவும் பிசியா நடிச்சிட்டுதான் இருக்கேன். இப்பதான் சரியான வாய்ப்பு வந்திருக்கு தமிழ்ல நடிச்சிருக்கேன். நல்ல வாய்ப்புகளை தரச் சொல்லுங்க நடிச்சிட்டே இருக்கேன்.
* எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் நடித்த அனுபவம்....?
அவரோட பாடுறதுதாங்க கஷ்டம். ஏன்னா எனக்கு பாட்டு அவ்வளவா வராது. நடிக்கிறது ஈசிங்க. குழந்தைகூட நடிக்கிற மாதிரி இருக்கும். பெரிய ஜீனியஸ்சுன்னு எந்த இடத்துலேயும் தெரியாது. இப்படி பண்ணலாமா அப்படி பண்ணலாமான்னு நம்மையே கேட்பார். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து பத்து படத்துக்குமேல நடிச்சிருக்கோம். தெலுங்குல நாங்க நடிச்ச மிதுனம் பெரிய ஹிட். அதை பார்த்துட்டுதான் இந்த படத்துல சான்ஸ் கொடுத்திருக்காங்க. தமிழ்ல நாங்க சேர்ந்து நடிக்கிற முதல் படம் இது.
* நீங்களும் படம் இயக்கி இருக்கீங்க. இந்த படத்தோட இயக்குனர் மதுமிதா எப்படி
சூப்பரான பொண்ணுங்க. லட்சுமி மேடம் 200 படங்கள் நடிச்சவங்களாச்சே... எஸ்.பி.பி. பல ஆயிரம் பாடல்கள் பாடியவராச்சேன்னு எந்த தயக்கமும் இல்லாம தனக்கு வேண்டியதை கேட்டு வாங்கிக்கிட்டாங்க. நாங்களும் எங்களோட தனிப்பட்ட அபிப்ராயம் எதையும் சொல்லாம சொந்த மகள் பேச்சை கேட்குற மாதிரி கேட்டு நடிச்சோம்.
* ஏன் பெண் இயக்குனர்கள் ஜெயிக்க முடியலை?
ஏன் ஜெயிக்கல., இந்தியில் பல முக்கிய படங்களை எடுத்தவங்க பெண் இயக்குனர்கள்தான். இன்னிக்கு நிறைய பெண்கள் இயக்குனராக வர்றாங்க. கொஞ்சம் ஆண்கள் அவர்களுக்கு குடும்ப பொறுப்புலேருந்து விடுதலை கொடுத்தா அவுங்களாலேயும் பெரிய அளவில் ஜெயிக்க முடியும். நாட்டுக்கு ராணியாக இருந்தாலும் வீட்டுக்கு மனைவிங்ற ஆணாதிக்க குணம் மறைந்தால் அவர்களாலும் ஜெயிக்க முடியும்.
* சின்னத்திரை நாட்டாமையா நீங்கதான் முதன் முதல்ல லைவ் ஷோ பண்ணினீங்க. இன்று அந்த ஷோக்கள் எப்படி நடக்குறதுங்றது கவனிக்கிறீங்களா?
நல்லாவே பண்றாங்க. பார்க்குறதுக்கு சந்தோஷமா இருக்கு. தனிப்பட்ட விஷங்களை குறைத்து சமூக பிரச்னைகளை அதிகமா பேசினாங்கன்னா இன்னும் நல்லா இருக்கும்.
* பொது விஷயங்களை பற்றி பளிச்சுன்னு கருத்து சொல்வீங்க. ஏன் அரசியலுக்கு வரவில்லை.?
உங்க கேள்வியிலேயே பதில் இருக்கு. அரசியலுக்கு வந்துட்டா பொது பிரச்னை பற்றி பளிச்சுன்னு பேச முடியாது. நாம எந்த கட்சியில இருக்கோமோ அந்த கட்சியோட பாலிசி, தலைவர்களோடு கருத்து இதையெல்லாம் மனசுல வச்சிக்கிட்டு பேசணும். சுருக்கமா சொன்னா மனசாட்சியை கழற்றி வச்சிட்டு பேசணும். அதுதான் அரசியல் நமக்கு சரிப்பட்டு வராதுன்னு முடிவு பண்ணிட்டேன்.
* இன்றைய புதுமுக நடிகை பற்றி உங்கள் கருத்து என்ன?
ரொம்ப திறமைசாலியா இருக்காங்க. ஒவ்வொருத்தர்கிட்டேயும் தேசிய அவார்ட்டுக்கான திறமை இருக்கு. ஆனா சினிமா அவர்களை பயன்படுத்திக்கல. வெறும் கிளாமருக்கும், டூயட்டுக்கும், ஹீரோ பின்னாடி ஓடுறதுக்கும்தான் பயன்படுத்துறாங்க. அப்புறம் எப்படி அவர்களோட திறமை வெளிப்படும், சிறை, சம்சாரம் அது மின்சாரம், அவள் ஒரு தொடர்கதை, அரங்கேற்றம் மாதிரியான ஹீரோயின் சப்ஜெக்டே வருவதில்லை பிறகு எப்படி அவர்கள் தங்கள் திறமையை காட்ட முடியும். வாய்ப்பு கொடுத்தா சாதிக்கிற சக்தி இருக்கு.
* இனி தொடர்ந்து நடிப்பீங்களா?
இந்த கேள்வியே தப்பு. நான் நடிக்கிறத நிறுத்தியிருந்தால்தானே இப்படி கேட்கணும். லட்சுமிக்கு நல்ல வாய்ப்பு கொடுப்பீங்களான்னு மற்ற இயக்குனர்கள்கிட்ட கேளுங்க.