சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் |
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்குதானேஆசைப்பட்டாய் பாலகுமாரா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் உள்பட சில படங்களுக்கு இசையமைத்தவர் சித்தார்த் விபின். அதோடு, இதற்குதானேஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நந்திதாவின் பாய் ப்ரண்டாக ஒரு காட்சியில் வந்து விஜயசேதுபதியிடம் அடிவாங்கிக்கொண்டு ஓட்டம் பிடிக்கும் வேடத்தில் நடித்தார். அந்த காட்சியில், இதயம் பலவீனமானவங்க, 16 வயதுக்குட்பட்டவங்க இந்த சண்டை காட்சிய தயவு செஞ்சு பார்க்காதீங்க என்று சொல்லிவிட்டு விஜயசேதுபதியை அடித்து சாய்ப்பவரை போன்று திரும்புவார் அதற்குள் இவரை அவர் நைய புடைத்து விரட்டியடித்து விடுவார். அந்த காட்சி பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆனதால், தொடர்ந்து வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் படத்திலும் நடித்த சித்தார்த் விபின், இப்போது மா.பா.க.ஆனந்த் நடிக்கும் ஒரு படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். ஆனால் சிரிப்பு நடிகராக மட்டுமே நடித்து ரசிகர்களிடம் சேர்ந்துள்ள சித்தார்த் விபின் சீரியசான நடிப்பில் எந்த அளவுக்கு ரசிகர்களை கவரப்போகிறார் என்பது அப்படம் திரைக்கு வரும்போதுதான் தெரியும்.