தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள காக்கி சட்டை எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை என்றொரு கருத்து இருக்கிறது. ஆனால் சிவகார்த்திகேயன் தரப்போ படம் முழு திருப்தி கொடுத்து விட்டது. குறிப்பாக, ரசிகர்கள் 100 சதவீதம் திருப்தி அடைந்துள்ளனர். எனக்கு அது போதும். ரசிகர்களின் திருப்திதான் என் திருப்தி என்கிறார். அதோடு, இதற்கு முன்பு நடித்த படங்களை விட இந்த படத்தைதான் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜீத் படங்களைப்போன்று அதிக தியேட்டர்களில் வெளியாகி சிவகார்த்திகேயனின் வியாபார வட்டத்தை விரிவு படுத்தியிருக்கிறதாம். அதனால், இனி வருங்காலங்களில் உலக அளவில் அவரது படங்கள் வெளியிடக்கூடிய ஒரு சூழல் இப்போது உருவாகியிருக்கிறதாம். அதனால், சிவகார்த்திகேயனைப் பொறுத்தவரை காக்கி சட்டை அவருக்கு நல்லதொரு ரூட்டைத்தான் ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறதாம். ஆக, அவரைப்பொறுத்தவரை ரொம்ப ஹேப்பிதானாம்.