பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
வருகிற 8ந் தேதி தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூடுகிறது. அதில் படங்கள் வெளியீட்டில் பல மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறது. குறிப்பாக பண்டிகை நாட்களில் மட்டுமே பெரிய படங்கள் வெளிவரவேண்டும். மற்ற வாரங்களில் சிறுபட்ஜெட் படங்கள் வெளிவரவேண்டும் என்கிற கட்டுப்பாடு கடுமையாக்கப்படும் என தெரிகிறது.
இந்த நிலையில் வருகிற 6ந் தேதி வெள்ளிக்கிழமை 13 படங்கள் வெளிவருகிறது. சித்தார்த் நடித்த எனக்குள் ஒருவன், ஆர்கே நடித்த என் வழி தனி வழி, சேரன் இயக்கியுள்ள ஜே.கே.என்னும் நண்பனின் வாழ்க்கை, ஆகியவை மட்டுமே பெரிய படங்கள். மகா மகா, கனல், ரொம்ப நல்லவண்டா நீ, இரவும் பகலும், தொப்பி, சேர்ந்து போலாமா, இஞ்சி மொரப்பா, ஆயா வடை சுட்ட கதை ஆகியவை சிறுபட்ஜெட் படங்கள். இதுதவிர சுதீப் நடித்த கன்னடப் படம் முரட்டு கைதி என்ற பெயரில் டப்பாகி வெளிவருகிறது. வில் கார்ட் என்ற ஹாலிவுட் படமும் தமிழில் டப் செய்யப்பட்டு வெளிவருகிறது.
தமிழ் நாட்டில் மொத்தம் சுமார் 1200 தியேட்டர்கள் உள்ளன. இதில் ரிலீஸ் படங்களை திரையிடும் தியேட்டர்கள் சுமார் 700. இதில் எனக்குள் ஒருவன் 250 முதல் 300 தியேட்டர்களில் ரிலீசாகிறது. மீதமுள்ள தியேட்டர்களைத்தான் 12 படங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு படமும் சராசரியாக 50 முதல் 100 தியேட்டர்களுக்குள்தான் வெளிவருகிறது.