Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அருகில் உள்ளவர்களை முட்டாளாக்கும் வேலையில் ஈடுபடும் நிவின்பாலி..!

03 மார், 2015 - 17:14 IST
எழுத்தின் அளவு:
Nivin-pauli-in-oru-vadakkan-selfie

'நேரம்' படத்தில் நடித்த நிவின் பாலியின் நேரம் இப்போது ரொம்ப நன்றாகவே இருக்கிறது. கடந்த வருடம் அவர் நடித்த படங்கள் பெரும்பாலும் ஹிட்டாக, இந்த வருட ஆரம்பமே அவருக்கு 'மிலி'யின் வெற்றியோடுதான் ஆரம்பமாகியிருக்கிறது. தற்போது 'ஒரு வடக்கன் செல்பி' என்கிற படத்தில் நடித்து வருகிறார் நிவின்பாலி. இந்தப்படத்தை இயக்கும் பிரஜித், வினீத் சீனிவாசன் இயக்கிய, 'மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்', 'தட்டத்தின் மறயத்து' ஆகிய படங்களில் துணை இயக்குனராக வேலை பார்த்தவர்.


அந்தப்படங்களில் ஹீரோவாக நடித்த நிவின் பாலிக்கும். இவருக்கும் ஏற்பட்ட நட்பும் புரிதலும் தான் இப்போது 'ஒரு வடக்கன் செல்பி' படம் உருவாக காரணமாக அமைந்திருக்கிறது. இந்தப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் மஞ்சிமா மோகன் சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார். சரி வடக்கன் செல்பி சொல்லவரும் கதை என்ன தெரியுமா..?


என்ஜீனியரிங் மாணவர்களான நிவின் பாலி மற்றும் அவரது நண்பர்களான அஜு வர்கீஸ், நீரஜ் மாதவ் மூவரும் அரியர்ஸ் வைத்துவிட்டு அதை எப்படியாவது முடித்துவிட வேண்டும் என பல வழிகளில் குட்டிக்கரணம் போட்டு வருபவர்கள்.. மற்ற நேரங்களில் கிராமத்தில் அருகில் உள்ளவர்களை முட்டாள்களாக்கி வேடிக்கை பார்ப்பதில் நிவின் பாலி & கோவுக்கு அவ்வளவு சந்தோசம்.. அவரது பெற்றோரோ தங்கள் மகன் படித்து பெரிய ஆளாக வருவான் என கனவு காண்கிறார்கள். ஆனால் நிவின் பாலியோ, குறுக்கு வழியானாலும் பரவாயில்லை, எப்படியாவது பெரிய ஆளாகவேண்டும் என கனவு காண்கிறார். இதை தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் தான் 'ஒரு வடக்கன் செல்பி'யின் சுவராஸ்யமான கதையாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in