Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஓ காதல் கண்மணி டிரைலருக்கு 3 நாட்களில் 13 லட்சம் ஹிட்ஸ்

03 மார், 2015 - 12:50 IST
எழுத்தின் அளவு:
13-Lakhs-hits-for-Maniratnams-Oh-Kadhal-Kanmani-trailer-in-3-days

கடல்' படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் வெளிவர உள்ள படம் ''ஓ காதல் கண்மணி''. மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் நித்யா மேனன் கதாநாயகி. ஏ.ஆர். ரஹ்மானின் இசை, பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் உருவாகிவரும் ஓ காதல் கண்மணி படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன் யூடியூபில் வெளியானது. 1 நிமிடம், 22 வினாடிகள் ஓடும் இந்த டிரைலரில் மணிரத்னத்திற்கே உரிய டச் தெரிகிறது. ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசையும், பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவும் மிரட்டலாக உள்ளன.


துல்கர் சல்மானின் நடிப்பும் ரசிக்கும்படி உள்ளதாக ரசிகர்களின் பாராட்டைப்பெற்றுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளி வந்தபோதே, பலராலும் பாராட்டப்பட்டது. அதோடு, டிரைலர் எப்போது வரும் என்ற ஆவலையும் உண்டாக்கியது. ஓ காதல் கண்மணி டிரைலர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது மட்டுமல்ல, மீண்டும் ஒரு அலைபாயுதே படத்தைப் பார்ப்பதுபோல் இளமைத்துள்ளலுடன் இருந்தது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்திருக்கிறது.


மணிரத்னத்தின் கேரியரில் சமீபகாலமாக அவர் இயக்கிய படங்கள் எதுவும் வசூல்ரீதியாக வெற்றிபெறவில்லை. அதிலும் கடைசியாக அவர் இயக்கத்தில் வெளிவந்த கடல் படத்திற்கு எதிர்மறை விமர்சனங்களே அதிகம் கிடைத்தது. முந்தைய தோல்விகளை துடைத்துப்போட்டுவிட்டு மணிரத்னத்துக்கு மிகப்பெரிய வெற்றியை ஓ காதல் கண்மணி படம் கொடுக்க வாய்ப்பிருக்கிறது. ஓ காதல் கண்மணி டிரைலர் வெளியாகி 3 நாட்களுக்குள் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் அதை பார்த்து ரசித்துள்ளது கூட அதற்கான அறிகுறிதான்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in