நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
பென்சில் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு, தற்போது த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தில், கயல் ஆனந்தியுடன் நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். சிம்ரன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ஆதிக் இயக்குகிறார். டார்லிங் படம் கொடுத்த வெற்றி உற்சாகத்தில் இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ற ரியல் லவ் ஸ்டோரி. குஷி, சிவா மனசுல ஷக்தி, மாதிரியான ஜாலியான காதல் கதை. இந்தப் படத்தை மிகவும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறார் பிரகாஷ். டார்லிங் படத்தில் ஜி.வி.பியின் நடிப்பு விமர்சிக்கப்பட்டது. பென்சில் படத்தில் பள்ளி மாணவன் கேரக்டர் என்பதால் அதில் தனித்து தெரிய வாய்ப்பில்லை. அதனால் தன் தவறுகளை திருத்திக்கொண்டு முழு ஈடுபாட்டுடன் நடித்து வருகிறார். தன்னை முழு நடிகனாக அடையாளப்படுத்த இந்தப் படம் உதவும் என்ற நம்புகிறார். படப்பிடிப்புகளை வேகமாக முடித்து ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டு வர இருக்கிறார்கள்.