ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நயன்தாரா சாயலில் சினிமாவில் என்ட்ரி ஆனவர் மேக்னாராஜ். வைதேகி காத்திருந்தாள் படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக நடித்த பிரமிளாவின் மகள் இவர். கன்னடத்தில் சில படங்களில் நடித்து விட்டு காதல் சொல்ல வந்தேன் என்ற படம் மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுத்தார். அப்போது இவரை ஜூனியர் நயன்தாரா என்றெல்லாம் பெரிய பில்டப் கொடுத்தார்கள். அதனால் நயன்தாராவுக்குகூட இந்த புது வரவு நடிகை தனது மார்க்கெட்டை கவிழ்த்து விடுவாரோ என்கிற அச்சம் ஏற்பட்டது. ஆனால், மேக்னாராஜ் நடித்த எந்தபடமும் ஓடவில்லை. அதனால் நயன்தாராவுக்கு அவரால் துளியும் பாதிப்பு ஏற்படவில்லை.
இந்த நிலையில், தற்போது ஏ.வெங்கடேஷ் இயக்கியுள்ள ரொம்ப நல்லவன்டா நீ என்ற படத்தில் அறிமுகமாகியுள்ள மலையாள நடிகை ஸ்ருதிபாலாவையும் அடுத்த நயன்தாரா என்று அந்த படக்குழுவினர் பில்டப் கொடுத்து வருகின்றனர். ஆனால் மேக்னாராஜ் ஓரளவு நயன்தாரா சாயலில் இருந்தார். இந்த ஸ்ருதிபாலா கொஞ்சம்கூட நயன்தாரா போன்று இல்லை. பிறகு எதற்காக நயன்தாராவுடன் இவரை ஒப்பிட்டு பேசுகிறார்கள் என்று கேட்டால், இவர் நயன்தாரா பிறந்த ஊரைச்சேர்ந்த நடிகை என்கிறார்கள்.