பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'காக்கி சட்டை' படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியான படமாக இருந்தது. படத்திற்கு வசூல் வரவேற்கத்தக்க அளவில் இருந்தாலும் எதிர்பார்த்த அளவில் இல்லையென திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்குக் காரணமாக படத்தின் வெளியீட்டுத் தேதியை அவர்கள் குறிப்பிடுகிறார்கள். சமீப காலமாக வசூலைக் குவிக்கும் நாயகனாக சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். 'காக்கி சட்டை' படம் பொங்கலுக்கு முன்பே தயாராகி விட்டது என்றாலும் படத்தை பொங்கலுக்கும் வெளியிடாமல், குடியரசு தினத்தன்றும் வெளியிடாமல் பிப்ரவரி மாதக் கடைசியில் வெளியிட்டது தவறு என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
தனுஷ் தயாரித்த படம் என்பதால், தனுஷ் நடித்த 'அனேகன்' பட வெளியீட்டிற்காக இந்தப் படத்தின் தேதியை மேலும் இரண்டு வாரங்கள் தள்ளி 27ம் தேதியன்றுதான் வெளியிட்டார்கள். 'அனேகன்' வந்த அதே பிப்ரவரி 13ம் தேதியன்று 'காக்கி சட்டை' வந்திருந்தால் கூட 'அனேகன்' படத்தை விட மிகப் பிரமாதமாக வசூலைக் குவித்திருக்கும் என்கிறார்கள்.
கிரிக்கெட், பரீட்சை ஆகியவற்றையும் மீறி படம் வெளியான முதல் மூன்று நாட்களில் 'காக்கி சட்டை' படம் சுமார் 15 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கலாம் எனத் தெரிவிக்கிறார்கள். இதே படம் ஒரு மாதம் முன்னர் வெளியாகியிருந்தால் மேலும் கூட 10 கோடி ரூபாய் வசூல் செய்திருக்க வாய்ப்பிருந்திருக்கும் என்கிறார்கள். இப்படித்தான் பிப்ரவரி 5ம் தேதி வெளிவந்த 'என்னை அறிந்தால்' படம் பொங்கலுக்கு வெளிவந்திருந்தால் மிகப் பெரிய வெற்றியைக் குவித்திருக்கும் என்றார்கள். அடுத்தடுத்து மிகப் பெரிய வசூலைக் குவிக்க வேண்டிய இரண்டு படங்கள் கொஞ்சம் தாமதமாக வெளியாகி, படத்தின் வசூலை அவர்களே பாதிக்க வைத்து விட்டார்கள் என்கிறார்கள்.