ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
சுந்தர்.சி இயக்கத்தில் ஆம்பள படத்தில் நடித்த விஷால், அடுத்து சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். பாண்டியநாடு ஹிட் படத்தில் கைகோர்த்தவர்கள் என்பதால் இந்த முறை அதை விடவும் மெகா ஹிட் படத்தைக்கொடுத்து விட வேண்டும் என்று புல் எனர்ஜியுடன் களமிறங்கியுள்ளனர்.
இந்த நிலையில், அடுத்து ஆர்யா நடித்து வரும் வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் விஷால், அதைத் தொடர்ந்து ஜிகர்தண்டா படத்தை தயாரித்த கதிரேசன் தயாரிக்கும் புதிய படத்தில் ஏப்ரல் மாதம் முதல் நடிக்கயிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
அந்த படத்தை இயக்குவது யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால் பல டைரக்டர்களிடம் கதை கேட்டு அதிலிருந்து 3 கதைகள் ரெடி பண்ணி வைக்கப்பட்டிக்கிறதாம். விஷால் அந்த கதைகளை கேட்டு அவர் எந்த கதையை ஓகே செய்கிறாரோ அந்த டைரக்டர்தான் விஷாலின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பினை பெறுவாராம். மேலும், அப்படத்தில் நடிப்பதற்கான கதாநாயகி செலக்சனும் நடந்து கொண்டிருக்கிறது.