விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
தமிழில், டான்சராக அறிமுகமாகி பின்பு ஹீரோவாகி, அப்படியே இந்திக்குச் சென்று இயக்குனர் ஆனவர் பிரபுதேவா, இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் இயக்குனராக இருந்த பிரபுதேவாவிற்கு சமீபத்தில் அவர் இயக்கிய இந்திப் படங்கள் வெற்றியை கொடுக்கவில்லை. தற்போது அக்ஷய்குமார் நடிப்பில் இயக்கி வரும் சிங் இஸ் பிளிங் படத்தை மட்டும் நம்பிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் பிரபுதேவா தமிழ் படம் ஒன்றை இயக்கப்போகிறார். இதனை வாசன் விஷூவல் வென்சர் நிறுவனத்தின் சார்பில் சிவஸ்ரீ சீனிவாசன் தயாரிக்கிறார். இதற்கான ஸ்கிரிப்டை உருவாக்கி வருகிறார் பிரபு தேவா. இதில் கமல் அல்லது விஜய் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது கமலுக்கு ஏற்ற வகையில் ஸ்கிரிப்ட் எழுதப்பட்டு வருவதாகவும், கமல் கால்ஷீட் கிடைக்காவிட்டால் அது விஜய்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளப்படும் என்றும் யூனிட் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.