பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
விஸ்வரூபம் படத்தில் ஆரோ சவுண்ட் சிஸ்டத்தை முதன்முதலாக தமிழுக்கு அறிமுகம் செய்தவர் கமல். அதேபோல், தியேட்டரில் படங்கள் வெளியாகும் அதே நாளில் வீடுகளுக்கும் டிவி மூலம் வெளியிட வேண்டும் என்று முதலில் முயற்சி செய்தவரும் அவரே. இப்படி எந்த புதிய விசயமாக இருந்தாலும் அதில் முன்னோடியாக திகழ்ந்து வரும் கமல், நேற்று வெளியிடட உத்தமவில்லன் ஆடியோ மற்றும் ட்ரெய்லரையும் வித்தியாசமான முறையில் வெளியிட்டார். அதாவது, படத்தின் ட்ரெய்லரை தனது செல்போன் மூலமே உலகமெங்கும் வெளியிட்டவர். பின்னர் ஆடியோவை தான் வெளியிட, மும்பையில் இருந்த தனது மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசனை பெற்றுக்கொள்ள வைத்தார். இவர் இங்கிருந்து டெக்னாலஜியை பயன்படுத்தி அவருக்கு அனுப்ப, அதை அங்கிருந்தபடியே ஸ்ருதியை பெற்றுக்கொள்ள வைத்தார். அப்போது ஸ்ருதியின் முகம் இங்குள்ள ஸ்கிரினில் தெரிந்தது. ஆக, சம்பந்தப்பட்ட விழாவில் இல்லாத ஒருவரை வைத்தே முதன்முறையாக புதுமையான முறையில் ஆடியோவை வெளியிடும் இந்த முறையையும் இப்போது கமல்தான் முதன்முதலாக தொடங்கி வைத்திருக்கிறார்.