அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பிரபல தயாரிப்பாளரும், தொழிலதிபரும், மீடியா நிறுவனருமான் ராமோஜி ராவ் ஒரு புதிய டி வி சேனலை தொடங்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது . அதற்கு ஈ டி வி பிளஸ் என்று பெயர் வைக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே அந்த ஈ டி வி நிறுவனத்துக்கு பல மொழிகளிலும் பல சேனல்கள் இருப்பது அனைவரும் அறிவர். தெலுங்கில் ஈ டி வி சேனல் தான் பெரும் லாபம் குவித்து வருகிறது . இந்நிலையில் தான் இன்னொரு சேனலை தொடங்க உள்ளது. புதிதாக தொடங்கப்பட உள்ள அந்த சேனலில் ரியாலிட்டி ஷோக்களும், சீரியல்களும் வர உள்ளது. படங்களின் சாட்டிலைட் உரிமைகளை வாங்குவதில் இந்த நிறுவனத்திற்கு சில பிரச்னைகள் இருந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் ஒரு படம் டிவியில் வெளியான பிறகு வரும் லாபத்தில் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கும் ஒரு பங்கு அளிக்க இந்த நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.