டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
'எல்லாம் அவன் செயல்', 'என் வழி தனி வழி' படங்களை தொடர்ந்து இப்போது மூன்றாவது முறையாக 'வைகை எக்ஸ்பிரஸ்' என்ற படத்தில் ஷாஜி கைலாஷ், ஆர்கே இருவரும் மீண்டும் இணைந்திருக்கின்றனர். இதிலும் ஆர்கே போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். சென்னையில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸில் நடைபெறும் சம்பவங்களை மையப்படுத்தி படத்தின் கதை பின்னப்பட்டிருக்கிறது. கதாநாயகியாக நீத்து சந்திரா நடிக்கிறார். அதுவும் இரட்டை வேடங்களில்.. கூடவே இனியா, சுஜா வாருணி, நாசர், எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
பொதுவாக ஆர்.கேவுக்கு பொருந்தும்படியாக பிறமொழிகளில் இருந்து கதைகளை வாங்கித்தான் ஷாஜி கைலாஷ் ரீமேக் பண்ணிவருகிறார். மலையாளத்தில் தான் இயக்கிய 'சிந்தாமணி கொலகேஸ்' படத்தை தான் 'எல்லாம் அவன் செயல்' ஆகவும், இந்தியில் வெளியான 'ஆப் தக சப்பன்' படத்தை 'என் வழி தனி வழி'யாகவும் மாற்றிய ஷாஜி கைலாஷ், இப்போது வைகை எக்ஸ்பிரஸ் படத்திற்காக ரீமேக் செய்ய இருப்பது மலையாளத்தில் வெளியான 'நாதியா கொல்லப்பட்ட ராத்திரி' படத்தை தான். ஆனால் இதை இயக்கியது ஷாஜி கைலாஷ் இல்லை.. இயக்குனர் மது இயக்கிய படம் தான் இது.