ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஜய் தொலைக்காட்சியில் நடந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் சீனியர் 4 போட்டியில் முதல் இடத்தை பிடித்தார் ஸ்பூர்த்தி. சூப்பர் சிங்கர் டைட்டில் ஒரு கையிலும், 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு மறுகையிலுமாக வாங்கிக் கொண்டு பெங்களூர் சென்று விட்டார். ஒன்பது வயதான ஸ்பூர்த்தி பெங்களூரில் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.
"எங்கம்மா எனக்கு இசையை சொல்லிக் கொடுத்து வளர்த்தாங்க. டிவியில் சூப்பர் சிங்கர் ஒளிபரப்பாகும்போது அதை காட்டி நீயும் ஒரு நாள் பரிசு வாங்கணும்னு சொல்லிகிட்டே இருந்தாங்க. நானும் தீவிரமா பிராக்டீஸ் பண்ணினேன். போட்டியில கலந்துக்கும்போது முதல் 5 இடங்களுக்குள் வந்துடுவேன்னு உறுதியா நம்பினேன். ஆனால் முதல் இடம் கிடைக்கும்ணு எதிர்பார்க்கவே இல்லை.