மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
காதலுக்கு கண்ணில்லை படத்தை தொடர்ந்து ஜெய் ஆகாஷ் இயக்கி, நடித்து வெளிவர இருக்கும் படம் நான் யார், இதில் அவருக்கு ஜோடியாக லண்டன் மாடல் அழகி ப்ரியா நடித்திருக்கிறார். யு.கே.முரளி இசை அமைத்துள்ளார். படத்தை பற்றி இயக்குனர் ஜெய் ஆகாஷ் கூறியதாவது:
நான் இயக்கி நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருக்கும் ஆக்ஷன் படம். கம்ப்யூட்டர் இளம் விஞ்ஞானிக்கு லண்டனில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. தன் புதுமனைவியுடன் அங்கு சென்று சந்தோஷமாக நாட்களை கழிக்கிறான். அப்போது திடீரென நடக்கும் ஒரு சாலை விபத்தில் அவன் மூளை பாதிக்கப்பட்டு தன்னை மறந்து விடுகிறான்.