அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தமிழ் சினிமாவின் 'டார்லிங்' ஜி.வி. பிரகாஷ், தனது அடுத்த ரிலீஸ் 'பென்சில்' படத்தை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டியில், “ நடிப்பிற்காக எனக்குள் இருக்கும் சிறு சிறு கூச்சங்களை விட நேர்ந்தது. அது ஒரு இமாலய சவாலாய் இருந்தது. தொடக்கம் முதலே ஒரு பயம் கலந்த சந்தேகம் இருந்துக்கொண்டே இருந்தது. 'டார்லிங்' படம் மூலம் மக்கள் என்னை ஒரு நடிகனாக ஏற்றுக் கொண்டது மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது. அடுத்து 'பென்சில்' வெளி வர தயாராக உள்ளது.
“தற்பொழுது கேமியோ சார்பில் ஜெயகுமார் தயாரிக்கும் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இயக்குனர் ஆதிக் எதை எப்போது செய்வாரென்றே தெரியாது. அவர் இந்த படத்தின் டைட்டில் சொல்லும்போதே எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. இப்படத்தில் எனது கதாப்பாத்திரம் மிகவும் பேசப்படும்.. எளிதில் இந்த கதாப்பாத்திரம் அனைவரையும் கவரும். இப்படம் அதன் கதைக்காகவும் , அதன் கதாப்பாத்திரங்களுக்காகவும் பேசப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு தளமே மிகவும் உற்சாகமானது. அந்த உற்சாகம் படம் முழுக்க நிறைந்து இருக்கும். விரைவில் இசையுடன் இசையுடன் உங்களை சந்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.