நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? |
மிஷ்கின் உதவியாளர் வடிவேல் இயக்கி உள்ள படம் கள்ளப்படம். ஸ்ரீசர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார், கே இசை அமைத்துள்ளார், கவுஜின் எடிட்டிங் செய்துள்ளார். பாலா கலை இயக்குனராக பணியாற்றி உள்ளார். இவர்கள் அனைவருமே இயக்குனராக, ஒளிப்பதிவாளராக, இசை அமைப்பாளராகவே நடித்துள்னர். படத் தயாரிப்பாளராக ஆடுகளம் நரேனும், அவரது மகளாக லட்சுமி ப்ரியாவும், தயாரிப்பு நிர்வாகியாக சிங்கம்புலியும் நடித்துள்ளனர்.
சினிமா வாய்ப்புக்காக திரியும் இவர்கள் நரேன் தயாரிப்பில் முதல் படம் தயாரிப்பதில் கிடைக்கும் அனுபவங்கள்தான் கதை. காமெடியாகவும், யதார்த்தமாகவும் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தப் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதற்கிடையில் ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலக பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது.
ஆஸ்திரேலியாவில் வருகிற ஜூலை 2ந் தேதி முதல் 12ந் தேதி வரை நடக்கும் ரேவலஷன் பெர்த் சர்வதேச திரைப்பட விழாவிலும், செப்டம்பர் 11ந் தேதி முதல் 20ந் தேதி வரை மெல்போர்னில் நடக்கும் அண்டர்கிரவுண்ட் திரைப்பட விழாவிலும் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.