ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஜீ தமிழ் தொலைக்காட்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு பிக் தமிழ் மெலடி விருது வழங்கும் விழாவை நடத்தியது. இதில் சிறந்த மெல்லிசை பாடகர், பாடகிகள், இசை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். சிறந்த இசை கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது.
விழாவில் இசை அமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத், இமான், சந்தோஷ் நாராயணன், பாடலாசிரியர் வைரமுத்து ஆகியோருக்கு மெல்லிசை விருதுகள் வழங்கப்பட்டது. இதில் நடிகர்கள் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட நட்சத்திர பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
ஹரிகரன், அனுராதா ஸ்ரீராம், சுனிதா சாரதி உள்ளிட்ட பாடகர் பாடகிகள் இசை நிகழ்ச்சி நடத்தி விழாவை கலகலப்பூட்டினர். பிரமாண்டமாக நடந்த இந்த மெல்லிசை விருது நிகழ்ச்சி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இன்று (பிப் 28) இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.