இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
'விக்ரமாதித்யன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து இன்னொரு முன்னணி நடிகரை தேடிப்போகாமல் பெண்களை மையப்படுத்தும் கதையை படமாக்க ஆரம்பித்துவிட்டார் இயக்குனர் லால்ஜோஸ். படத்தின் பெயர் 'நீ-நா'. இந்தப்படத்தில் புதிய நாயகியாக தீப்தி சதி என்பவரை அறிமுகப்படுத்தியுள்ளார். நீனா என்கிற கதாபாத்திரத்தில், டைட்டில் ரோலில் நடிக்கிறார் தீப்தி. மும்பையை சேர்ந்தவர் என்றாலும் தீப்தி பாதி மலையாளி தான்.
இந்தப்படத்தின் படப்பிடிப்புக்காக ரஷ்யாவில் கடந்த இரண்டு வாரங்களாக முகாமிட்டு காட்சிகளை படமாக்கி வந்தார் லால்ஜோஸ். இவர் தற்போது படப்படிப்பை நடத்திய மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஆகிய இடங்களில் குளிரின் தாக்கம் மைனஸ் 6லிருந்து மைனஸ் 1௦ டிகிரி வரை இருந்ததாம். கூடவே பனிப்பொழிவும் கடுமையாக இருந்ததாம்.. இந்தப்படத்தின் மொத்த டீமும் குளிருக்கு பாதுகாப்பான ஸ்வெட்டர், கையுறைகளை அணிந்திருந்ததால், அங்கே வேடிக்கை பார்க்க வந்த பொதுமக்கள் ஏதோ ரஷ்யப்படத்தின் ஷூட்டிங் தான் நடக்கிறது என நினைத்துவிட்டார்களாம்.
போதாக்குறைக்கு கதாநாயகி தீப்தியும் பார்ப்பதற்கு ரஷ்யப்பெண் போலவே இருந்ததால் பல பெண்கள் அவரிடம் வந்து நட்பாகவும் பேச ஆரம்பித்துவிட்டார்களாம். இந்த இடங்களுக்கு கடந்த மேமாதமே சுற்றுலா வந்து சென்றிருந்த இயக்குனர் லால் ஜோஸ், “சம்மரில் நான் பார்த்த இந்த இடங்கள் இப்போது குளிரில் வேறு ஒரு புதிய கதை சொல்கின்றன. பனிப்பொழிவுதான் என்றாலும் நாங்கள் நினைத்த மாதிரியே காட்சிகளை படமாக்கியுள்ளோம்” என்கிறார் திருப்தியுடன்.