ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒரு நடிகர் இன்னொரு நடிகருக்கு ரசிகராக இருக்க மாட்டார். விதிவிலக்காக, ரஜினி, அஜித் ஆகியோருக்கு சக நடிகர்கள் பலர் ரசிகர்களாக இருக்கிறார்கள். நடிகைகளில் நயன்தாராவுக்குத்தான் சக நடிகர்கள், சக நடிகைகள் பலர் ரசிகையாகவும் ரசிகராகவும் இருக்கிறார்கள். நடிகை நயன்தாராவுக்கு தமிழ்சினிமாவில் மட்டுமல்ல, தென்னிந்திய சினிமாவிலும் கூட பல நட்சத்திர ரசிகர்களும், ரசிகைகளும் இருக்கிறார்கள்! நயன்தாராவை விரும்பும் நடிகைகளில் பட்டியலில் நடிகை இஷா தல்வரும் ஒருவர்!
எந்தளவுக்கு ரசிகை தெரியுமா? தீவிர ரசிகையாம்.
நயன்தாரா தற்போது நடித்து வரும் மலையாள படம் - பாஸ்கர் தி ராஸ்கல். சமீபத்தில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடந்தது. பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் படப்பிடிப்பு நடக்கும் இடத்தைக் கேள்விப்பட்ட நடிகை இஷா தல்வர், நேராக படப்பிடிப்புதளத்திற்கு சென்று நயன்தாராவை சந்தித்துள்ளார். சுமார் ஒரு மணி நேரம் நயனுடன், உரையாடி அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டு திரும்பியிருக்கிறார்! இந்த சம்பவத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்து கொண்டிருக்கிறார் இஷா தல்வார்!