வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
இணையதளங்களில் நடிகைகளின் முகங்களை வைத்து மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படங்கள், நடிகைகளின் பெயரில் அவர்களது சாயலில் உள்ள பெண்களின் நிர்வாண வீடியோக்களை சில விஷமிகள் அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது தொடர்கதையாகத்தான் இருக்கிறது.. முதலில் இணையதளங்களில் ஏதாவது ஒன்றை தேடிக்கொண்டிருக்கும்போது ஏதேச்சையாக தட்டுப்பட்ட இப்படிப்பட்ட புகைப்படங்களோ, வீடியோக்களா டெக்னாலஜி வளரவளர இப்போது வாட்ஸ்அப் மூலமாக நேரடியாகவே செல்போனுக்கு வர ஆரம்பித்துவிட்டன.
சமீபத்தில் ஹன்சிகாவின் குளியல் வீடியோ என சொல்லி ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது மலையாள நடிகையான ரக்சனா நாராயணன்குட்டி என்பவரின் ஆபாச புகைப்படம் வெளியாகி அவருக்கு மட்டுமல்ல, கேரள திரையுலகினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து ரக்சனாவிடம் போன்போட்டு பலரும் அதுகுறித்து விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்களாம்.