தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மோகன்லால் நடித்து 2009ம் ஆண்டு வெளிவந்த படம் ஜாகர் அலைஸ் ஜாக்கி ரீலோடட். மலையாளத்தில் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட முதல் கேங் ஸ்டார் படம். மோகன்லாலுடன் ஷோபனா, பாவனா, சுமன், சம்பத்ராஜ், மனோஜ் கே.ஜெயன், ராகுல் தேவ் நடித்திருந்தனர். கோபி சுந்தர் இசை அமைத்திருந்தார், அமல் நீரத் இயக்கி இருந்தார்.
கேங் ஸ்டார்களுக்குள் ஏற்படும் பிரச்னைகளை தீர்த்து வைக்கும் நாட்டாமை, கேங் லீடர் மோகன்லால். ஒரு கும்பல் மந்திரி மருமகனை கடத்த அவரை மீட்டுக் கொடுக்கிறார் மோகன்லால். இந்த விஷயத்தில் கோவாவை தலைநகராக கொண்டு செயல்படும் கேங் ஸ்டார் லீடருக்கும், மோகன்லாலுக்கும் மோதல்வர துப்பாக்கி தோட்டாக்கள் துடிக்க, குண்டுகள் வெடிக்க, கார்கள் பறக்க ஜெயிப்பது யார் என்கிற கதை. பாவனா போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.
தற்போது இந்தப் படத்தை ஜே.ஜி.பி மீடியா என்ற நிறுவனம் தமிழில் டப் செய்து வெளியிடுகிறது. பொதுவாக மலையாளப் படங்கள் தமிழில் டப் செய்து வெளியிடப்படுவது அபூர்வம். அதுவும் மோகன்லால் படம். இதற்கு வெற்றி நடை என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். டப்பிங் பணிகள் நடந்து வருகிறது.