ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானாவர் ஸ்ரீதிவ்யா. குழந்தை நட்சத்திரமாக தெலுங்கில் பல படங்களில் நடித்த ஸ்ரீதிவ்யா தமிழில் அறிமுகமான முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றதால் தொடர்ந்து அவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தன. அவற்றைத் தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருந்தவர் முதல் படத்தின் வெற்றிக்குப் பின் 'ஜீவா, வெள்ளைக்காரதுரை' ஆகிய படங்களில் மட்டுமே நடித்தார். இதில் 'வெள்ளைக்கார துரை' மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. மீண்டும் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்துள்ள 'காக்கி சட்டை' படம் இன்று வெளியாகிறது.
இந்தப் படத்திற்குப் பின் ஸ்ரீதிவ்யா சம்பளத்தை உயர்த்தப் போவதாக கோலிவுட்டில் செய்திகள் அடிபடுகிறது. தற்போது ஜி.வி.பிரகாஷ்குமாருடன் 'பென்சில்' படத்திலும், அதர்வாவுடன் 'ஈட்டி' படத்திலும் நடித்து வருகிறார். அடுத்தடுத்து அவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகிறதாம். 'காக்கி சட்டை' படத்திற்கேப் பிறகே அந்தப் படங்களை ஒப்பந்தம் செய்ய முடிவெடுத்துள்ளாராம், சம்பளத்தை உயர்த்துவதற்காகவே கொஞ்சம் நாட்களைக் கடத்துகிறார் என்று சொல்கிறார்கள்.
சுட்டித்தனமான நடிப்பில், சினேகா, நயன்தாரா ஆகியோர் வரிசையில் ஸ்ரீதிவ்யா இடம் பிடிக்க வாய்ப்புள்ளதாகவே பலரும் கருதுகிறார்கள். அதனால்தான் அவரைத் தங்கள் படங்களில் நடிக்க வைக்க பலரும் முன் வருகிறார்களாம். ஸ்ரீதிவ்யாவின் சம்பளத்தை நிர்ணயிக்கப் போகும் படமாக 'காக்கி சட்டை' அமையப் போகிறது என்றுதான் கோலிவுட்டில் இருக்கும் பல பேச்சுகளில் ஒன்றாக இருக்கிறது.