ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடன இயக்குநராக இருந்த ராகவேந்திரா லாரன்ஸ் இயக்குநர் அவதாரம் எடுத்து இயக்கிய படம் - முனி. இந்தப் படத்தைத் தயாரித்தவர் இயக்குநர் சரண். அமர்க்களம் படத்தில் மகா கணபதி என்ற பாடலில் ராகவேந்திரா லாரன்ஸை நடன நடிகராக அறிமுகம் செய்தவர் சரண்தான். அவரே ராகவேந்திரா லாரன்ஸை இயக்குநராக தமிழில் அறிமுகம் செய்தார். ராகவேந்திரா லாரன்ஸ் இயக்கிய முனி படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதனைத் தொடர்ந்து முனி படத்தின் இரண்டாம் பாகமாக காஞ்சனா என்ற படத்தை இயக்கினார். இந்தப்படமும் ஹிட்டானது.
முனி படத்தின் 3 ஆம் பாகமாக ஒரு படத்தை கடந்த ஆண்டு ஆரம்பித்தார். படத்தை தொடங்கியதிலிருந்தே ஏகப்பட்ட தடங்கல்கள். என்ன காரணம் என்று யோசித்த ராகவேந்திரா லாரன்ஸ், தடங்கலுக்குக் காரணம் படத்தின் தலைப்புதான் என்று முடிவு செய்து முனி-3 என்ற தலைப்பை காஞ்சனா-2 என்று மாற்றினார். பெயரை மாற்றிய நேரமோ என்னவோ...காஞ்சனா-2 படத்துக்கு விமோசனம் கிடைத்துள்ளது. இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வாங்கி உள்ளது. ஏப்ரல் 10 அன்று உலகம் முழுக்க வெளியாகிறது காஞ்சனா 2