'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தற்போது ரீமேக் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதை அடுத்து, பல முன்னணி கதாநாயகர்களும் அதில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுக்கு பிரபல நடிகரான அக்கினேனி நாகர்ஜூனாவும் விதி விலக்கல்ல. கன்னடத்தில் வெளிவந்த மைத்ரி என்ற படம் மெகா ஹிட்டானது நினைவிருக்கலாம். தற்போது அந்த படத்தின் ரீமேக்கில் நடிக்க நாகர்ஜூனா அதிக ஆர்வம் காட்டுவதாக செய்திகள் வெளி வந்துள்ளன. அந்த படத்தில் மோகன் லாலும், புனீத் ராஜ்குமாரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது குறித்த அதிகார பூர்வமான தகவல்கள் விரைவில் வெளி வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மைத்ரி படத்தை கிரிராஜ் இயக்கி உள்ளார். என்.எஸ்.ராஜ்குமார் தயாரித்துள்ளார்.