'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
முன்னணி நடிகர்களின் படங்களைக் குறித்த அதிகாரபூர்வ செய்திகள் வெளிவருவதற்கு முன் அநியாயத்துக்கு யூகச்செய்திகள் வெளியாகி மக்களை குழப்பி வருகின்றன. இதற்கு விஜய் நடிக்கும் புலி படமும் விதிவிலக்கில்லை. சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புலி படத்தை கேரளாவைச் சேர்ந்த விநியோகஸ்தர் ஷிபு தமீன் என்பவர் தயாரிக்கிறார். அவரை விஜய்யிடம் அறிமுகப்படுத்தி அவருக்கு கால்ஷீட் வாங்கிக் கொடுத்த, விஜய்யின் பி.ஆர்.ஓ.வையும் பார்ட்னராக்கிக் கொண்டார் ஷிபு. இருவரும் இணைந்து எஸ்.கே.டி. ஸ்டுடியோஸ் என்ற பெயரில் படநிறுவனம் தொடங்கி புலி படத்தை தயாரித்து வருகின்றனர்.
கி.மு.வில் கோமு என்ற பெயரில் சிம்புதேவன் எழுதிய சித்திரக்கதையின் செலுலாய்ட் வடிவம்தான் புலி. ஃபேன்டஸி படமாக உருவாகி வரும் புலி படத்தில் இரண்டு யுகத்தில் கதை நடக்கிறது இந்த விஷயத்தை வைத்து, ஆரம்பத்தில் இப்படத்தில் விஜய் 2 வேடங்களில் மட்டுமே நடிப்பதாகக் கூறப்பட்டது. இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை... புலி படத்தில் விஜய் 3 வேடங்களில் நடிக்கிறார் என்று கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த தகவலை புலி படத்தைத் தயாரிக்கும் எஸ்.கே.டி. ஸ்டுடியோஸ் நிறுவனம் தற்போது மறுத்துள்ளது. புலியில் விஜய் சார் 3 வேடங்களில் நடிக்கிறார் என்பது உண்மைக்குப் புறம்பான செய்தி என்று இதுகுறித்த ட்வீட் செய்துள்ளது அந்நிறுவனம். 3 வேடங்களில் விஜய் நடிக்கவில்லை என்பதை உறுதி செய்துள்ள எஸ்.கே.டி. ஸ்டுடியோஸ் நிறுவனம், விஜய்க்கு ஒரேயொரு வேடமா? அல்லது இரட்டை வேடங்களா என்பது குறித்து தகவல் எதையும் தெரிவிக்கவில்லை.