இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தெலுங்கில் செளர்யம், சங்கம், தருவு ஆகிய படங்களை இயக்கியவர் சிவா. தமிழில் கார்த்தி நடித்த சிறுத்தை படத்தை இயக்கியவர் பின்னர் அஜீத்தை வைத்து வீரம் படத்தை இயக்கினார். இரண்டு படங்களுமே வெற்றி பெற்றது. அதனால் என்னை அறிந்தால் படத்தை அடுத்து மீண்டும் அஜீத்தை இயக்கும் வாய்ப்பினை பெற்றிருக்கிறார் சிவா. வீரம் படத்தை விஜயா புரொடக்சன்ஸ் தயாரித்த நிலையில், இந்த புதிய படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார்.
இந்த படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும், அஜீத்தின் ஆரம்பம், என்னை அறிந்தால் படங்களின் டைட்டீலை படம் திரைக்கு வரும் நேரத்தில் வெளியிட்ட நிலையில், சிவாவோ, வீரம் டைட்டீலை முன்னரே அறிவித்து விட்டார். அதேபோல் இந்த முறையும் படப்பிடிப்பு ஆரம்பிக்கும்போதே டைட்டீலை அறிவிக்க திட்டமிட்டிருக்கிறாராம்.
அதனால், நூற்றுக்கணக்கான டைட்டீல்களை யோசித்து இப்போது ''அச்சமில்லை'' என்ற தலைப்பினை முடிவு செய்து வைத்திருக்கிறாராம் சிவா. அஜீத்துக்கும் இந்த டைட்டீல் ஓகேதானாம். அதனால் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே இந்த டைட்டீலை உறுதிப்படுத்த உள்ளாராம் டைரக்டர் சிவா.