ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் ராம் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் ”பண்டக சேஸ்கோ”, இப்படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருக்கும் எஸ்.எஸ்.தமன் இப்படத்தின் அனைத்து பாடல்களையும் தயார் செய்துவிட்டாராம். பாடல்களை கேட்ட இயக்குநர் கோபிசந்த் மாலினேனி, தமனை பாராட்டி தள்ளியுள்ளார். அந்தளவுக்கு பாடல்களை அனைத்தும் அற்புதமாக வந்திருக்கிறதாம்.
தொடர் தோல்விகளை கொடுத்துக் கொண்டிருக்கும் நடிகர் ராம்க்கு இந்த படம் மட்டுமே பெரிய நம்பிக்கையாக இருக்கிறது, இருந்தாலும் இயக்குநர் கோபிசந்த் மாலினேனி ஒரு வெற்றிப்பட இயக்குநர் என்பதாலும், சமீபத்தில்தான் ரவிதேஜாவை வைத்து “பலுப்பு” என்ற சூப்பர் ஹிட் கொடுத்த தெம்பிலும் இருப்பதால், கண்டிப்பாக இந்த படமும் வெற்றி பெறும் என நம்பிக்கையோடு இருக்கிறார் ராம்.
பண்டக சேஸ்கோ படத்தில் ராம்க்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சோனல் சௌஹன் நடித்துக் கொண்டிருக்கிறார்கள், மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ஜெகபதி பாபு நடித்துக் கொண்டிருக்கிறார்.