தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இசையமைப்பாளராக அறிமுகமாகி 'நான்' படத்தின் மூலம் நாயகனாக நடிகராகவும் மாறியவர் விஜய் ஆண்டனி. அந்தப் படம் லாபகரமான வசூலைக் கொடுத்ததைத் தொடர்ந்து அடுத்து 'சலீம்' படத்திலும் நாயகனாக நடித்தார். இந்தப் படமும் வெற்றிகரமாக ஓடியது. தற்போது 'இந்தியா பாகிஸ்தான்' என்ற படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார். விஜய் ஆண்டனி தன்னுடைய சொந்தத் தயாரிப்பு நிறுவனத்தில் தயாரித்துள்ள இந்தப் படத்தை ஆனந்த் இயக்குகிறார். தீனா தேவராஜன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். நாயகியாக சுஷ்மா ராஜ் நடித்திருக்கிறார்.
“நான், சலீம்” ஆகிய படங்களைப் போலவே இந்தப் படமும் த்ரில்லர் படமாக இல்லாமல் ஒரு ரொமான்டிக் காமெடி படமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்கள். படத்தின் டைட்டில்தான் பிரச்சனைக்குரிய டைட்டில் போன்று தோன்றினாலும் படத்தில் ஒரு பொருத்தமான கருத்து உள்ளது என்று படத் தரப்பிலிருந்து தெரிவிக்கிறார்கள். தான் நாயகனாக நடித்த 'நான், சலீம்' ஆகிய இரண்டு படங்களுக்குமே விஜய் ஆண்டனிதான் இசையமைத்திருந்தார். ஆனால், இந்தப் படத்தில் தீனா தேவராஜன் என்ற இசையமைப்பாளருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.
இப்படத்தை முழுவதுமாகப் பார்த்துவிட்டதாகவும், அடுத்து 'ஹாட்ரிக்' வெற்றிக்குத் தயாராக இருக்கிறேன் என்றும் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.