'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில் சயின்ஸ் ஃபிக்ஷன் படங்கள் வெளிவருவதே அபூர்வமான விஷயமாக இருக்கிறது. கடந்த வருடங்களில் தமிழில் எடுக்கப்பட்ட சயின்ஸ் ஃபிக்ஷன் படங்களில், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் படம் சிறப்பானமுறையில் எடுக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு அப்படியொரு முயற்சியையும் யாரும் செய்யவில்லை. சயின்ஸ்ஃபிக்ஷன் படம் எடுப்பதில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ள இப்படியான சூழ்நிலையில் சூர்யா அடுத்து நடிக்கவிருப்பது சயின்ஸ்ஃபிக்ஷன் படம் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
வெங்கட்பிரபு இயக்கத்தில் தற்போது மாஸ் படத்தில் நடித்து வரும் சூர்யா, இப்படத்தை முடித்த உடன் ''24'' என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை அவரே தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். யாவரும் நலம் படத்தை இயக்கிய விக்ரம் குமார் இயக்கும் ''24'' படம் முழுமையான சயின்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பில் பல புதிய நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டி இருப்பதால் ''24''படத்தின் 90 சதவிகித படப்பிடிப்பு மும்பையில் உள்ள பிரபல ஸ்டுடியோவிலேயே நடைபெறுகிறது. ப்ளோர் முழுக்க க்ரீன்மேட் செய்யப்பட்டுள்ள அந்த ஸ்டுடியோவில் எடுக்கப்பட்ட காட்சிகளுக்கு அமெரிக்கா சென்று கிராபிக்ஸ் செய்ய இருக்கிறார்களாம்.