நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |
என்னை அறிந்தால் வெற்றிக்கு பிறகு அஜித் ரசிகர்கள் அடுத்து வீரம் சிவா இயக்க உள்ள படத்தினை மிகவும் எதிர்பார்த்து இருக்கின்றனர். என்னை அறிந்தால் படம் கமர்ஷியலாக வெற்றியடைந்தாலும், அஜித் ரசிகர்களுக்கு தீனி போடும் வகையில் அப்படத்தில் காட்சிகள் இல்லை என்பதில் அவர்களுக்கு மன வருத்தம் இருக்கவே செய்கிறது. அந்த ஏமாற்றத்துக்கு மரந்துபோடுவதுபோல் சிவா இயக்க உள்ள படத்தில் அஜித் நடிக்கும் காட்சிகள் அதிரடியாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இது ஒரு பக்கமிருக்க, அஜித்தை வைத்து சிவா இயக்க உள்ள படத்தின் நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்க இரப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
தற்போது கிடைத்த தகவலின்படி, சிவா இயக்க உள்ள படத்துக்கு அனிருத் இசையமைக்கவில்லையாம். ஜி. வி. பிரகாஷிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றுவருவதாக சொல்லப்படுகிறது. அவரும் சந்தோஷமாக ஓகே சொல்லியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தன் படத்துக்கு என்ன மாதிரியான பாடல்கள் வேண்டும்.... எப்போது பாடல் பதிவு வைத்துக் கொள்வது போன்ற விஷயங்கள் பற்றி பேசுவதற்கு அனிருத்தை அணுகியபோது அவரிடமிருந்து சரியான ரெஸ்பான்ஸ் இல்லையாம். அதனால்தான் அவர் வேண்டாம் என முடிவு செய்தனராம். ஆனால் அஜித் ரசிகர்கள் அனிருத் இசையமைக்க வேண்டும் என்ற ஆசையை சமுக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.