பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சிம்பு கடைசியாக நாயகனாக நடித்த 'போடா போடி' படம் 2012ம் ஆண்டு வெளிவந்த்து. இரண்டு வருடங்களுக்குப் பிறகு அடுத்த மாதம் சிம்பு நீண்ட காலமாக நடித்து வந்த 'வாலு' படம் வெளியாக உள்ளது. அந்தப் படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் நயன்தாராவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள 'இது நம்ம ஆளு' படம் வெளியாக உள்ளது. இந்தப் படங்கள் வெளிவருவதற்கு முன்பே சிம்பு அடுத்து இரண்டு படங்களில் நடிக்க ஆரம்பித்து விடுவார்.
கௌதம் மேனன் இயக்கத்தில் ஆரம்பமாகி பின்னர் திடீரென நிறுத்தப்பட்ட படத்தை மீண்டும் தொடங்க உள்ளார்கள். இந்தப் படத்தில் சிம்புவும், பல்லவி சுபாஷும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை கௌதம் மேனன் ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே அவருக்கு அஜித்திடம் இருந்து அழைப்பு வந்ததால் இந்தப் படத்தை அப்படியே போட்டுவிட்டு 'என்னை அறிந்தால்' படத்தை இயக்கப் போய்விட்டார். இப்போது இந்தப் படத்தை மீண்டும் தூசி தட்டி எடுக்க உள்ளார்கள்.