டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, மற்றும் பலர் நடிக்க பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் படம் 'புலி'. சிம்புதேவன் இயக்கும் இந்தப் படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். விஜய் இதற்கு முன் நடித்த “சச்சின், வில்லு” ஆகிய படங்களுக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். அதற்குப் பின் ஒரு இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் விஜய் நடிக்கும் படத்திற்கு இசையமைக்கிறார்.
'சச்சின், வில்லு' ஆகிய படங்கள் வியாபார ரீதியாகப் பெரிய வெற்றியைப் பெறவில்லையென்றாலும், அந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின. அதனால், மீண்டும் விஜய் நடிக்கும் படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத்திற்கு வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருந்தாலும், தமிழில் தேவிஸ்ரீயால் இன்னும் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க முடியவில்லை.