டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஒரு படம் ஹிட்டானால் அடுத்த படத்திலும் அந்த கூட்டணி தொடர்வதுதானே வழக்கம். இதற்கு மலையாள சினிமா மட்டும் விதிவிலக்காகி விடுமா என்ன? அந்த வகையில் பிரபல மலையாள இயக்குனர் ஜோஷி இயக்கி கடந்த 2௦12ல் வெளியான சூப்பர்ஹிட் படம் 'ரன் பேபி ரன்'. இந்தப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார் அமலாபால்.. தற்போது மீண்டும் ஜோஷியின் டைரக்ஷனில் 'லைலா ஓ லைலா' என்கிற படத்தில் நடித்து வருகிறார் மோகன்லால். இதிலும் மோகன்லாலுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார் அமலாபால்.
இந்தப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பை மும்பையில் நடத்தியுள்ளார் ஜோஷி. இந்தப்படத்தில் மோகன்லாலுக்கு வில்லனாக நடிப்பவர் ஜூனைத் ஷேக்.. காஷ்மீரை சேர்ந்த இவர் ஏற்கனவே சுரேஷ்கோபி, ஜெயராமை வைத்து கடந்த வருடம் ஜோஷி இயக்கிய 'சலாம் காஷ்மீர்' என்கிற படத்தில் தீவிரவாதியாக நடித்தவர்தான். அந்தப்படத்தில் ஜூனைத்தின் நடிப்பு ஜோஷியை மிகவும் கவர்ந்துவிட்டதால், இந்தப்படத்தில் மெயின் வில்லனாக புரமோஷன் கொடுத்துவிட்டார்.