தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜாவுடன் தொடர்ந்து பணியாற்றி வந்த சூர்யா, தனியாக 2டி என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனத்தைத் தொடங்கினார். தொடங்கிய உடனே சிங்கம் 2 படத்தை இணைந்து தயாரித்து செம லாபம் பார்த்தார். இது நம்ம ஆளு படத்தைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கும் ஹைக்கூ படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தற்போது தயாரித்து வருகிறது. குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படத்தில் பேபி வைஷ்ணவி, மாஸ்டர் நிஷேஷ் நடிக்க பிந்துமாதவி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இவர்களுடன் சூர்யா கௌரவத்தோற்றத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டிங்கை பிரவீன் கவனிக்கிறார்.
ஹைக்கூ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் செய்தி முன்னரே வெளியனாலும், அவர் இதுநாள்வரை மாஸ் படத்தின் படப்பிடிப்பில் பிஸயாக இருந்தார். தற்போது மாஸ் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் 24 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். இந்நிலையில், ஹைக்கூ படத்தில் சூர்யா பங்குபெறும் காட்சிகள் இன்று படமாக்கப்படுகிறது. ஹைக்கூ படப்பிடிப்பு முடிந்த பிறகு 24 படத்துக்காக கெட்டப் மாறுகிறார் சூர்யா.