சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
நடிகர் விஷால், விஷால் பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தையும், வி மியூசிக் என்ற ஆடியோ நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். வி மியூசிக் நிறுவனத்தை விஷாலின் தங்கை ஐஸ்வர்யா கவனித்துக் கொள்கிறார். வி மியூசிக் இதுவரை பூஜை, ஆம்பள படங்களின் பாடல்களை வெளியிட்டது. இசை, காக்கி சட்டை படங்களின் டிஜிட்டல் காலர் டியூனை வெளியிட்டது.
இப்போது முதன் முறையாக ஒரு வெளி பட ஆடியோவை வெளியிட்டுள்ளது. மிஷ்கின் உதவியாளர் வடிவேல் இயக்கி உள்ள கள்ளபடத்தின் ஆடியோ உரிமத்தை வாங்கி உள்ளது. இதற்கு கே. இசை அமைத்துள்ளார். ஒரு தனியார் பன்பலை ரேடியோவில் இன்று (பிப் 25) கள்ளப்படத்தின் பாடல்களை வெளியிட்டார் விஷால். இதில் இயக்குனர் வடிவேல், நடிகர் ஸ்ரீமன் சந்தோஷ், இசை அமைப்பாளர் கே. எடிட்டர் நரேன், கேமராமேன் ஜிஷ்னு ஆகியோர் அவரவர் கேரக்டர்களாக நடித்துள்ளனர். இவர்கள் தவிர தம்பி ராமையா, லட்சுமிப்ரியா நடித்துள்ளனர். நாட்டுப்புற கலையை வைத்து ஒரு சினிமா எடுக்க முயற்சிக்கும் இவர்கள் படும் அவஸ்தைகள்தான் படம்.