பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
டைரக்டர் பாண்டிராஜ் இயக்கிய கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்தவர் பிந்துமாதவி. அதையடுத்து, அதே விமலுடன் தேசிங்கு ராஜா படத்திலும் நடித்தார். அந்த வகையில் விமலுடன் நடித்த இரண்டு படங்களுமே பிந்துமாதவிக்கு ஹிட்டாக அமைந்தன. ஆனபோதும், அடுத்தபடியாக விமலுடன் நடிக்க அவர் எடுத்து முயற்சிகள் பலனிக்கவில்லை. ஆனால், விமல் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தை இயக்கிய பாண்டிராஜ், தற்போது சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் ஹைக்கூ படத்தில் பிந்து மாதவிக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடம் கொடுத்துள்ளார். பசங்க, மெரினா படங்களைத் தொடர்ந்து குழந்தை நட்சத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாண்டிராஜ் இயக்கும் இந்த படத்தில் சூர்யா-அமலாபால் இருவரும் கெஸ்ட் ரோலில் தோன்றுகிறார்கள். இதில் பசங்களுடன் இணைந்து நடிக்கும் முக்கிய வேடத்தில் பிந்துமாதவிதான் நடிக்கிறார். ஏற்கனவே இந்த ஹைக்கூ படப்பிடிப்பை தொடங்கிய விட்ட பாண்டிராஜ், இன்று முதல் சூர்யா - அமலாபால் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்குகிறார்.