‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தான் பிரபலமாவதற்கு முன் தனக்கு உதவிய யாரையும் சந்தானம் மறப்பதே இல்லை. மாறாக அவர்களை தன்னுடன் வைத்துக் கொண்டு சம்பளம் கொடுத்து வருகிறார். தற்போது அவருக்கு காமெடி ட்ராக் எழுதும் அனைவருமே அவரது நண்பர்கள். இந்தவரிசையில் தனக்கு பேரும் புகழையும் கொடுத்த, 'லொள்ளு சபா' டிவி நிகழ்ச்சியின் இயக்குநருக்கும் பேருதவி புரிந்திருக்கிறார் சந்தானம்.
'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தைத் தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடிக்கும் புதிய படம் இனிமே இப்படித்தான். 'லொள்ளு சபா' டிவி நிகழ்ச்சியின் மூலம் அனைவரது பாராட்டையும் பெற்ற முருகானந்தத்துக்கு இப்படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார் சந்தானம். இனிமே இப்படித்தான் படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது.
சந்தானத்தின் ஜோடியாக அஸ்னா மற்றும் அகிலா கிஷோர் ஆகியோர் நடிக்கிறார்கள். விரைவில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
'இனிமே இப்படித்தான்' படத்தைத் தொடர்ந்து மற்றொரு படத்திலும் சந்தானம் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். 'இனிமே இப்படித்தான்'படத்தை முடித்துவிட்டு, உடனடியாக புதிய படத்தை தொடங்கவும் திட்டமிட்டு இருக்கிறார் சந்தானம். இதற்கிடையில், காமெடியனாக உதயநிதியுடன் நடிக்கும் 'நண்பேன்டா', ஆர்யாவுடன் நடித்திருக்கும் 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' படங்களையும் சந்தானம் முடித்து கொடுத்திருக்கிறார்.