‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
மதராஸி படத்தில் அறிமுகமான மும்பை மாடல் வேதிகாவுக்கு தமிழ் சினிமா பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. பாலாவின் பரதேசியிலும், வசந்தபாலனின் காவியத் தலைவனிலும் நடிப்பை கொட்டிய போதிலும் வாய்ப்புகள் இல்லை. இதனால் கன்னட சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்.
பி.வாசு கன்னடத்தில் இயக்கிக் கொண்டிருக்கும் ஷிவலிங்காதான் வேதிகாவின் ஒரே நம்பிக்கை. சிவராஜ்குமார் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படம் பக்கா த்ரில்லர் கதை. ஆப்த மித்ரா, ஆப்த ரக்ஷகா, அரக்ஷகா என தொடர் ஹிட்டுகளை கன்னடத்தில் பி.வாசு கொடுத்திருப்பதால் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. தமிழ் படம் பாணியில் பெரிய பட்ஜெட்டில் படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. வேதிகா கிளாமராகவும் நடித்திருக்கிறார். இந்த படத்தின் ரிசல்ட்டுக்கு பிறகே புதிய படங்களை ஒப்புக் கொள்ளவும் முடிவு செய்திருக்கிறார்.